திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூரை அடுத்த பட்டுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (19). இவர் நேற்று (ஏப். 25) இரவு கரடிகுடி பகுதியிலிருந்து மாதனூர் நோக்கி நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
தடுப்புச்சுவரில் மோதி இருசக்கர வாகனம் விபத்து: இளைஞர் உயிரிழப்பு! - தடுப்புசுவரில் மோதி இருசக்கர வாகனம் விபத்து
ஆம்பூர் அருகே நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்.
![தடுப்புச்சுவரில் மோதி இருசக்கர வாகனம் விபத்து: இளைஞர் உயிரிழப்பு! தடுப்புசுவரில் மோதி இருசக்கர வாகனம் விபத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11537343-thumbnail-3x2-accident.jpg)
tirupattur-two-wheeler-accident
இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது நண்பரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.