தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர்மழையால் விற்பனை பாதிப்பு.. வேதனையில் தவிக்கும் நடைபாதை வியாபாரிகள்! - tirupattur street vendors

திருப்பத்தூரில் பரவலாக மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நடைபாதைக் கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்மழையால் விற்பனை பாதிப்பு.. வேதனையில் தவிக்கும் நடைபாதை வியாபாரிகள்!
தொடர்மழையால் விற்பனை பாதிப்பு.. வேதனையில் தவிக்கும் நடைபாதை வியாபாரிகள்!

By

Published : Nov 11, 2022, 6:53 PM IST

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்றிரவு முதலே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(நவ.11) காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூரில் பூக்கடை, பழக்கடை, வெற்றிலை கடை, எலுமிச்சம் பழக்கடை போன்றவற்றை நடத்திவரும் நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் தங்களது வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சென்னைப் புறநகர் பகுதிகளில் தொடர் மழையால் 28 விமானங்கள் தாமதம்

ABOUT THE AUTHOR

...view details