தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹார்டுவேர் கடையில் தீ விபத்து! - திருப்பத்தூர் தீ விபத்து

திருப்பத்தூர் : வாணியம்பாடியில் ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.

Tirupattur Shop fire
Tirupattur Shop fire

By

Published : Jul 2, 2020, 2:01 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சீ.எல் சாலையில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் ஆனந்தவேல். இவர், நேற்று மதியம் 2 மணி அளவில் ஊரடங்கு காரணமாக கடையை அடைத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மாலை 7.20 மணியளவில் திடீரென கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

எனினும் தீ விபத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் கருகி நாசமாகின. இந்தத் தீ விபத்து குறித்து வாணியம்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'அறிவுரை கூற ஆள் வைத்திருக்கும் ஸ்டாலின் அரசுக்கு எவ்வாறு அறிவுரை வழங்க முடியும்'- அமைச்சர் உதயகுமார் கேள்வி?

ABOUT THE AUTHOR

...view details