தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏசி வெடித்ததில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு! - tirupattur ac explodes

திருப்பத்தூர்: வக்கணம்பட்டி பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் வீட்டில் ஏசி வெடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

tirupattur RPF personnel died and his wife injured in ac explosion
ஏசி வெடித்ததில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு!

By

Published : Feb 16, 2020, 10:51 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (40). இவர் செங்கல்பட்டு பகுதியில் ரயில்வே காவலராக பணியாற்றிவருகிறார். இவருக்கு வெற்றிசெல்வி என்ற மனைவியும், ஒன்பது வயதில் சௌமியா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை உறங்க சென்றபோது பெட்ரூமில் இருந்த ஏசி திடீரென வெடித்து சண்முகம் மீது தீப்பற்றிக் கொண்டது, அப்போது கணவரை காப்பாற்ற சென்ற மனைவி வெற்றிசெல்விக்கு பலத்தத் தீ காயம் ஏற்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் அவரது மனைவி வெற்றிசெல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வேலூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏசி வெடித்ததில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு!

இதையும் படிங்க:நாகையில் குடிக்க பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றிய சகோதரர் - காப்பாற்றிய உறவினரும் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details