திருப்பத்தூரில் இன்று (ஆகஸ்ட் 28) 48 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் இரண்டாயிரத்து 759 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 221 நபர்கள் சிகிச்சைப் பெற்று முழுமையாக குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பி உள்ள நிலையில், மேலும் அரசு உள்பட தனியார் மருத்துவமனைகளில் 481 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூரில் புதிதாக 48 பேருக்கு கரோனா உறுதி - திருப்பத்தூர் கரோனா அப்டேட்ஸ்
திருப்பத்தூர்: புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்து 759ஆக அதிகரித்துள்ளது.
![திருப்பத்தூரில் புதிதாக 48 பேருக்கு கரோனா உறுதி tirupattur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8596240-255-8596240-1598627361209.jpg)
tirupattur
மாவட்டத்தில் இதுவரை 54 ஆயிரத்து 522 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், ஆயிரத்து 637 பேரின் பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளன. மேலும் திருப்பத்தூரில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57ஆக உள்ளது.
இதையும் படிங்க:கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்!