திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் வருவாய் துறை அலுவலர்கள், காவல் துறையினர் கரோனா பெருந்தொற்று காரணமாக அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி சென்ற லாரி ஒன்று சோதனைச் சாவடியில் இருந்த அலுவலர்களை கண்டு பாதியிலேயே நின்றது. பின்னர் அதன் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதைக்கண்ட காவல் துறையினர், லாரியை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது அதில் 25 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாச்சியர் லாரியை பறிமுதல் செய்தார். அதைத் தொடர்ந்து ஆம்பூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.