திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறைக் காவலர் உள்பட 25 சிறைக்கைதிகளுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது.
திருப்பத்தூரில் கரோனா எதிரொலி - சிறைக்கைதிகள் வேலூர் சிறைக்கு மாற்றம் - திருப்பத்தூரில் கைதிகளுக்கு கரோனா
திருப்பத்தூர்: கரோனா வைரஸ் தொற்று காரணமாக கிளைச் சிறை கைதிகள் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூரில் கரோனா எதிரொலி - சிறைக்கைதிகள் வேலூர் சிறைக்கு மாற்றம்
இதனால் ஐந்து கைதிகள் பிணையில் வெளியே வந்தனர். இந்நிலையில் 20 கைதிகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் கிளைச் சிறையில் இருந்த 10 கைதிகளை இன்று (ஆக.28) வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிளைச் சிறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து இரண்டு நாள்கள் மூடப்பட்டன. இதையடுத்து இனிவரும் காலங்களில் கைதிகளுக்கு கரோனா பரிசோதனை எடுத்த பின்னரே அனுமதிக்கப்படுவர் என்று சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.
Last Updated : Aug 28, 2020, 6:51 PM IST