திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அம்பூர்பேட்டை சிவன் தெருவைச் சேர்ந்தவர் கருணாகரனுக்கு(54), உடல்நிலை சரியில்லாததால், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்ததில், கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கரோனாவிற்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கருணாகரன், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (ஆகஸ்ட் 3) உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரின் உடல் வேலூரிலிருந்து வாணியம்பாடி கொண்டுவரப்பட்டு அங்கு புதைக்கப்படவுள்ளது. இதனால் வாணியம்பாடி வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகம் சார்பில் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள காமராஜபுரம் சுடுகாட்டு பகுதியில் புதைப்பதற்காக ஏற்பாடுகளை செய்தனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்! இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அலுவலர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க...டிஎஸ்பி வீட்டில் போதைப் பொருள் பறிமுதல்!