திருப்பத்தூர்:தேசிய நெடுஞ்சாலைகளிலும், சாலைகளிலும் சமீபத்தில் விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆகையால், சாலை விதிகளை கடைபிடித்து சாலையில் வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும், உத்தரவுகளையும் வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும், நாள்தோறும் சாலை விபத்துகளும், விபத்து மரணங்களும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் வழியே செல்லும் அரசு நகரப் பேருந்தில் அரசின் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசிய படி பேருந்தை அசால்டாக ஓட்டியது மட்டுமின்றி அத்துடன் அவருக்கு பிடித்த நொறுக்குத் தீனிகளையும் உண்டு கொண்டு மிகவும் கவனக்குறைவாக பேருந்தை இயக்கி வந்ததாக அப்பேருந்தில் பயணம் செய்தவர்கள் பலரும் குற்றம் சாட்டினர்.
அதனிடையே பேருந்தில் பயணித்த ஒருவர் அவர் செய்த செயல்களை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்நிலையில் வாணியம்பாடி - ஆம்பூர் வழித்தடத்தில் செல்லக்கூடிய அரசு பேருந்தை அரசின் விதிமுறைகளை மீறி அந்த பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசிய படியே ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டிய அரசு ஓட்டுநர்