தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது! - tirupattur latest news

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ganja_sezied
ganja_sezied

By

Published : Oct 14, 2020, 4:06 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துத்திப்பட்டு சுடுகாட்டு பகுதியில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது.

இரண்டு கிலோ கஞ்சா

இதையடுத்து, அவரிடமிருந்த கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், பதுக்கி வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் அவர் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சைபுல்லா என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை உமராபாத் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details