திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதியதாக மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பத்தூரில் இன்றைய கரோனா நிலவரம்! - corona toll
திருப்பத்தூர்: மாவட்டத்தில் இன்று புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![திருப்பத்தூரில் இன்றைய கரோனா நிலவரம்! tirupattur corona toll](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7208149-corona-cases-1-2708newsroom-1598536292-338.jpg)
tirupattur corona toll
மாவட்டத்தில் இதுவரை இரண்டாயிரத்து 141 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் 53 ஆயிரத்து,719 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஆயிரத்து 704 பேர் சோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மேலும், மாவட்டத்தில் தற்போது மூன்றாயிரத்து 293 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.