திருப்பத்தூர்: தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவைகள் அனைத்தும், 16.01.2023 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26.01.2023(குடியரசு தினம்) தினத்தன்று மூடிவைக்க வேண்டும்.
எனவே, மேற்படி நாட்களில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் FL1/FL2/FL3/FL3A/FL3AA/FL11 உரிமம் உள்ள பார்கள் மற்றும் மது விற்பனையகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நாளில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர், மாவட்ட ஆட்சியர் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வார்.
திருப்பத்தூர்: ஜனவரி 16, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மற்றும் பார்களை மூட உத்தரவு அதேபோல் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், மது கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மதுக்கூட உரிமை தாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு!