தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மாசி கரக திருவிழா! - திருப்பத்தூர் மாசி கரக திருவிழா

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி கரக திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

tirupattur chamundeshwari temple masi karagam festival
சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மாசி கரக திருவிழா!

By

Published : Feb 20, 2020, 6:37 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் எரிக்கரை பகுதியில் நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

அக்கோயிலில் மாசி கரக திருவிழாவை பெரியாங்குப்பம், நாச்சார்குப்பம், விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், சோலூர், அய்யனூர், காட்டுக்கொல்லை உள்ளிட்ட ஏழு கிராமங்கள் ஒன்றிணைந்து கடந்த பல ஆண்டுகளாக மாசி மாதத்தில் ஐந்து நாள்களாக திருவிழா நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் இந்தாண்டு கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, மாபெரும் திருமுழுக்கு, பூந்தேர் ஊர்வலம், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைத் தொடர்ந்து முதல் புதன்கிழமையன்று மகா வாணவேடிக்கையுடன் பூங்கரகம் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எரிக்கைரையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி சென்றடைய உள்ளது.

இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தை வரம் வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்தும் குடும்ப பிரச்னை, தொழில் உள்ளிட்ட அனைத்துக்கும் வரம் வேண்டி கரகத்தின் மீது உப்பு, மிளகு, பொறி, நாணயம் உள்ளிட்டவைகளைப் போட்டு வழிபட்டனர். நினைத்த வரம் அம்மன் அருள்பாலிப்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மாசி கரக திருவிழா!

இதையும் படிங்க:வழிப்பாட்டு கோயிலை விட்டுகொடுக்க முடியாது: பொதுமக்கள் ஆர்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details