தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் கைது! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர்: தொடர் செயின் பறிப்பு, வழிப்பறி எனப் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 11 சவரன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

chain_snatching
chain_snatching

By

Published : Feb 3, 2021, 6:48 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவர் கடந்த வாரம் நியூ டவுன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர். இதையடுத்து லோகேஸ்வரி காவல்துறையில் புகாரளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று வாணியம்பாடி பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் காவல்துறையினர் தேடிவந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான இருவர் என்பதும், ஆம்பூர் பெரிய வெங்கடசமுதிரம் பகுதியை சேர்ந்த சுதாகர் (20), பிரவின் (19) எனத் தெரியவந்தது.

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே அவர்கள் மீது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கு வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதும், நாட்றம்பள்ளி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர், இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 11 சவரன் தங்க நகையும், வழிப்பறிக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:மான் உள்ளிட்ட வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டதாக 10 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details