திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகும், இந்த அரசு மருத்துவமனை தாலுகா அரசு மருத்துவமனையாகவே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 3,500 புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், 800க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனால், மாவட்ட அந்தஸ்து கொண்ட பெரிய மருத்துவமனையாக உள்ளது. ஆனால் புறநோயாளிகளுக்கு வழங்கும் ஓபி சீட்டு அறையில் ஒரு பணியாளர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காலை முதலே நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமதி சீட்டை பெரும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
ஓபி சீட்டு வாங்க நேயாளிகள் அவதி இதன் காரணமாக சமூக ஆர்வலர்கள் கூடுதல் பணியாளர்களை பணி அமர்த்தி, நோயாளிகள் சிரமப்படாமல் இருக்க வழிவகை செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:துப்பாக்கிகளைப் பயன்படுத்த தயங்காதீர்! - காவலர்களுக்கு டிஜிபி 'அழுத்தமான' அறிவுறுத்தல்