திருப்பத்தூர்:திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலை கண்ணனூர் மாரியம்மன் கோயில் எதிரில் கூலித் தொழிலாளி விஜயா, அலமேலு ஆகியோர் வசித்துவருகின்றனர்.
இங்கு, நேற்று திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவர்கள் இருவர்களுடைய வீடுகளும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் சுமார் 50ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் சிவனருள் பார்வையிட்டார்.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்