தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் அலங்கார மீன் வளர்க்க விருப்பமா? - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு - PMMSY

திருப்பத்தூரில் அலங்கார மீன்கள் வளர்க்க விருப்பமுள்ள விவசாயிகள் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

District Collector invites farmers to grow ornamental fish
அலங்கார மீன் வளர்க்க விருப்பமுள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

By

Published : Feb 22, 2023, 8:13 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் மாநில அரசின் நிதி உதவியுடன் கூடிய பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (PMMSY) 2021-22 கீழ் புழக்கடையில் அல்லது கொல்லைப்புறத்தில் அலங்கார மீன் வளர்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அலங்கார மீன் வளர்ப்பு திட்டம்:புழக்கடை / கொல்லைப்புறத்தில் (Backyard) அலங்கார மீன் வளர்ப்பு திட்டத்திற்குத் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1 அலகு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.3,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.1,20,000/-, பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.1,80,000/- மானியமாக வழங்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பொது பிரிவு பயனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள்:மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அலங்கார மீன் வளர்க்க விருப்பமுள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை (எண். 16, 5வது மேற்கு குறுக்கு தெரு, காந்திநகர், காட்பாடி, வேலூர்- 600 007) அலுவலக தொலைப்பேசி எண். 0416-2240329. அலைபேசி எண். 7598490494, மின்னஞ்சல் adfifvellore1@gmail.com தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கோவையில் அதிர்ச்சி.. சாக்கடையில் கிடந்த தங்க துகள்கள்.. 7ஆம் வகுப்பு மாணவன் பலி..

ABOUT THE AUTHOR

...view details