தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலினப்பெண்ணிற்கு ஆதரவு; ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது பால்கேனுடன் சென்று புகார் அளித்த மக்கள்! - scheduled tribe

ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்ட பட்டியலினப் பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்த நபர்களை, கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பட்டியலின பெண்ணிற்கு ஆதரவு; ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது பால் கேனுடன் சென்று புகார் அளித்த மக்கள்
பட்டியலின பெண்ணிற்கு ஆதரவு; ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது பால் கேனுடன் சென்று புகார் அளித்த மக்கள்

By

Published : Jul 18, 2022, 10:33 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட பனங்காட்டேரி மற்றும் காமனூர்தட்டு ஆகியப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலை வாழ்மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தலைவர் பதவி பட்டியலினத்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

ஆகையால், நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு இந்துமதி என்ற பட்டியலினப்பெண் போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், இந்துமதி நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தலைவராக பட்டியலினப்பெண் பதவியேற்கக்கூடாது என நாயக்கனேரி பகுதி மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ள நிலையில் அதன் வழக்குத் தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட இந்துமதிக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி, நாயக்கனேரி மற்றும் காமனூர் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டோரை நாயக்கனேரி பஞ்சாயத்து நிர்வாகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைவர் சிவக்குமார் என்பவர் ஒதுக்கி வைத்துள்ளார்.

மேலும் தங்களிடம் பால் வாங்கக்கூடாது , விவசாயப்பணிகளில் ஈடுபடக்கூடாது எனக்கூறி ஊரில் இந்துமதிக்கு ஆதரவு தெரிவிப்போரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட நாயக்கனேரி பகுதியைச்சேர்ந்த நபர்கள் நாயக்கனேரி பஞ்சாயத்து நிர்வாகியான சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்கள் பால் கேனுடன் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகார் அளித்த மலை வாழ் மக்களின் பேட்டி

இதையும் படிங்க:வீட்டுமனை பட்டா இல்லாமல் பழங்குடியின மக்கள் அவதி

ABOUT THE AUTHOR

...view details