திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண்ணுக்கும் அதேபகுதியை சேர்ந்த ஷேக் இஸ்மாயில், முகமது ஜைனு மற்றும் சாதம் உசேன் ஆகிய மூன்று பேருக்கும் அண்மையில் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஒன்றாக வெளியில் செல்லும்போது புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
இதனை பயன்படுத்திக்கொண்ட மூன்று ஆண் நண்பர்களும் உன் புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம். அதை செய்யாமலிருக்க நீ பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி அந்த பெண்ணிடம் பணம் பெற்றுவந்துள்ளனர்.