திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி பகுதியைச் சேர்ந்த தம்பதியர் தீர்த்தமலை - அமுதா. இவர்களுக்கு சபரிஸ் என்ற மூன்று வயது மகனும் உள்ளார். இந்நிலையில் அமுதா, தனது மூன்று வயது மகனுடன் அருகேவுள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது தாயின் கை பிடித்து சென்ற சிறுவன், திடீரென தாயின் கையை விட்டு சாலையோரம் சென்றுள்ளான். அப்போது ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு தக்காளி ஏற்றிவந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.