திருப்பத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சங்கம், சந்திரா, சோபா உள்ளிட்ட ஜவுளிக் கடைகளுக்கு கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். துணிக்கடைகளின் நிர்வாகம் கரோனா விதிமுறைகளை சரிவர பின்பற்றவில்லையென தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், இன்றும் (ஜூன் 24) மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளதாகவும், நிர்வாகம் முறையாக வழிநடத்தவில்லை எனவும் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது.