திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்பலூரில் வசிப்பவர் குணசேகரன் (45). இவரது குழந்தைகள் மூன்று பேர் தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாலை 6.30 மணி அளவில் தனியார் பள்ளியின் வாகனம், இவரது குழந்தைகளை ஜோலார்பேட்டை ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளது.
வழக்கம்போல குணசேகரின் அக்கா பரமேஸ்வரி தன்னுடைய தம்பி குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு சென்றுள்ளார்.
நடந்து சென்ற பெண்ணிடம் மூன்று சவரன் நகை பறிப்பு அப்போது அடையாளம் தெரியாத நபர் அவருடைய கழுத்தில் இருந்த மூன்று சவரன் நகையை பறித்து சென்றுள்ளான். இது தொடர்பான புகாரின் பேரில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா