திருப்பத்தூர்:மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியம் அருகே அதிகாலை 4 மணியளவில் திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தப்பியோட முயற்சி
அப்போது இருவேறு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களைத் தடுத்து நிறுத்தி வாகனத்தைச் சோதனையிட்டனர். அவர்களின் டேங்க் பையில் ஆந்திர மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன எண் பலகை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர்.