தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞர்கள் கைது - Tirupattur district News

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Three boys arrested for walking around with swords
Three boys arrested for walking around with swords

By

Published : Aug 2, 2020, 5:33 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியில் பட்டாக் கத்தியுடன் மூன்று இளைஞர்கள் சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற பெண்ணிடம் இளைஞர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன அப்பெண் அலறி கூச்சலிட்டுள்ளார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், மூன்று இளைஞர்களையும் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வெலக்கல் நத்தம், குனிச்சியூர் பகுதியைச் சேர்ந்த அன்பு (19), வசந்தகுமார் (18), பிரவீன் (18) என்பது தெரியவந்தது. இவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ஊர் சுற்றிவந்தது தெரியவந்தது. இதுமட்டுமின்றி, சில இடங்களில் இவர்கள் கைவரிசையைக் காட்டி இருசக்கர வாகனங்களையும் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், மூன்று பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கறிக்கடை உரிமையாளருக்கு கத்தி வெட்டு - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details