தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் தலைமையில் 1,156 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளான கொத்தூர், தகரகுப்பம் பாரதிநகர், கொல்லப்பள்ளி ஆகிய இடங்களில் மாநில சோதனைச் சாவடிகளும், மாவட்ட எல்லைகளான சின்னகந்திலி, சிம்மணபுதூர், தோரணம்பதி, வெலக்கல்நத்தம் (லட்சுமிபுரம்), மாதனூர், உள்ளிட்ட எட்டு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், மருத்துவ துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.