திருப்பத்தூர்: வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இரண்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், ஒரு காவலர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கிராமிய காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் காவலர், அம்பூர்பேட்டை, கோவிந்தாபுரம், கோனாமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஒன்பது பேர் உள்பட மாவட்டத்தில் 70 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.