தமிழ்நாடு

tamil nadu

சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

திருப்பத்தூர்: வனப்பகுதியை விடுத்து கிராமத்தின் உள்ளே வந்த சிறுத்தை நடமாடியதைக் கண்ட கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

By

Published : Mar 31, 2020, 7:49 AM IST

Published : Mar 31, 2020, 7:49 AM IST

சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!
சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான ஏரிகுத்தி கிராமத்தில் எஸ்.எல்.ஆர். என்பவரது நிலத்தின் அருகே சிறுத்தை ஒன்று சென்றுகொண்டிருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த தமிழரசன் எ‌ன்பவ‌ர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது படம் பிடித்துள்ளார்.

பின்பு இது குறித்து அவர் வனத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். இந்தத் தகவலின்பேரில் பேரணாம்பட்டு வனத் துறையினர் சிறுத்தையைப் பிடிக்க தீ‌விர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகச் சிறுத்தை தாக்கி எந்த ஒரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன் சிறுத்தைக் குட்டி ஒன்று பேரணாம்பட்டு காப்புக்காடு வனப்பகுதியில் இறந்து கிடந்துள்ளது.

அந்தக் குட்டி சிறுத்தைத் தேடி வந்திருக்கலாம் என்றும் அச்சிறுத்தையின் மூலம் இனி எந்த ஓர் உயிர்ச்சேதமும் ஏற்படாமல் இருப்பதற்குள் அச்சிறுத்தையை வேறு வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க :கரோனா நிதி: உண்டியல் பணம் ரூ.9000 வழங்கிய 5 வயது சிறுமி

ABOUT THE AUTHOR

...view details