தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு - Thiruppathur Kumbabhishekam

திருப்பத்தூர்: ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா
பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா

By

Published : Mar 12, 2020, 10:35 PM IST

Updated : Mar 12, 2020, 11:43 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஒன்பதாம் தேதியன்று ஸ்ரீ மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா கோலாகலமாக தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து 10, 11ஆம் தேதிகளில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் கும்பாபிஷேக தினமான இன்று பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா

இதையும் படிங்க: உப்பிலியப்பன் கோயில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

Last Updated : Mar 12, 2020, 11:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details