திருப்பத்தூர் மாவட்டம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 1ஆவது பகுதியில் வசித்து வருபவர் தமிழ் வேந்தன்(65). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சற்குணம். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சற்குணத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்திருந்தனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை - Robbery at the teacher's home
திருப்பத்தூர்: வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 6 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் பணம் கொள்ளை போன சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் கொள்ளை
சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்றபோது பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் தமிழ்வேந்தன் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மளிகைக்கடை பூட்டை உடைத்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை