தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஆட்சியின் கைக்கூலி கூட்டுறவு அலுவலர்கள் - திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் காட்டம் - Thiruppathur Legislative Assembly

திருப்பத்தூர்: அதிமுக ஆட்சியின் கைக்கூலி கூட்டுறவு அலுவலர்கள் என திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி காட்டமாக தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆர்ப்பாட்டம்
சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 6, 2020, 7:51 PM IST

Updated : Mar 6, 2020, 11:25 PM IST

திருப்பத்தூரில் கந்திலி தொடக்க வேளாண்மை நிலவள வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியின் தேர்தல் தொடர்ந்து நான்காவது முறையாக ரத்து செய்யப்பட்ட்டுள்ளது.

திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு இதுகுறித்து கேட்கச் சென்றார். அங்கு அலுவலர்கள் இல்லாத காரணத்தினாலும், பலமுறை அலுவலர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டும் எந்த பயனில்லை எனக் கூறி அவர் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி கூறும்போது, "கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலவள வங்கியில் நடைபெறவிருந்த தேர்தல் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்படும். நான்காவது முறையாக அதிமுக ஆட்சியின் கைக்கூலியாக செயல்படும் கூட்டுறவு சார்ந்த அலுவலர்கள் இரவோடு இரவாக தேர்தலில் சாதி ரீதியான கலவரம் நடைபெறும் என கூறி நோட்டீஸ் ஒட்டி தேர்தலை ரத்து செய்துள்ளனர்" என குற்றஞ்சாட்டினார்.

சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: திமுக ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல் - 100க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு

Last Updated : Mar 6, 2020, 11:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details