திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி, துணை காவல் ஆய்வாளர் முனிரத்தினம் மற்றும் காவலர்கள் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேத்தாண்டப்பட்டி சஞ்சிவினூர் ஏரிக் கரை அருகே அடையாளம் தெரியாத 3 நபர்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் நாட்றம்பள்ளி காவலர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில், காவலர்களை கண்டதும் அந்த இளைஞர்கள் தப்பி ஓட முயன்றபோது அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் வாணியம்பாடி அருகே அரப்பாண்டகுப்பம் மந்திரி வட்டம் பகுதியை சேர்ந்தவர்களான சக்திவேல் (24), பசுபதி (23), சிக்கணாங்குப்பம் டேங்க் வட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் அபினேஷ் (19) மற்றும் ரமேஷ் (19) என்பது தெரிய வந்தது.