தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீ தெய்வநாயகி அம்மன் கோயில் மாசி மாத திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு! - ஸ்ரீ தெய்வநாயகி அம்மன் கோயில்

திருப்பத்தூர்: சந்திரபுரம் அருகே உள்ள ஸ்ரீ தெய்வநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி மாத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Deivanagi amman
Deivanagi amman

By

Published : Mar 14, 2021, 12:47 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ தெய்வ நாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தற்போது மாசி மாத திருவிழா நடைப்பெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தீ மிதித்தல், சாட்டையடி உள்ளிட்ட தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

இந்தக் கோயிலானது திருமண தோஷங்கள், குழந்தை பாக்கியம், வறுமை நோய் நொடி நீங்குதல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் வரும் பக்தர்களுக்கு உடனே நிறைவேற்றி தரும் வல்லமை உள்ளதாக ஐதீகம்.

அவ்வாறு கோரிக்கைகள் நிறைவேறிய பக்தர்கள் ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாசி மாத திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயிலில் 7ஆம் நாள் நவராத்திரி விழா: பட்டாபிஷேக அலங்காரத்தில் அம்மன் தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details