தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சகோதரியை கொன்றதால் பழிக்குப் பழி: சொந்த மச்சானை வெட்டியவர் கைது! - tiruppattur district

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தில் நேற்று (பிப். 22) சொந்த மச்சானை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்தவரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருப்பத்தூர் காவல் துறையினர்
திருப்பத்தூர் காவல் துறையினர்

By

Published : Feb 23, 2021, 7:47 AM IST


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையடுத்த ஏலகிரி கிராமத்தில் நேற்று (பிப். 22) காலை குமரன் (30) என்பவர் அடையாளம் தெரியாத நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம், அனேரி பகுதியைச் சேர்ந்தவர் குமரன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி ரம்யா என்பவரை 2014ஆம் ஆண்டு அடித்துக் கொலைசெய்துள்ளார்.

அதன் வழக்கு விசாரணை, திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், குமரன் ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி (25) என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, அவருடன் குடும்பம் நடத்திவந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் குமரன் நேற்று (பிப். 22) காலை ஏலகிரி கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அனேரி பகுதியைச் சேர்ந்த ராஜி (30) என்பவர் குமரனை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துள்ளார்.

மச்சானை வெட்டிய மாமன் கைது
தனது சகோதரியைக் கொலைசெய்த வழக்கு சம்பந்தமாக இன்று (பிப். 23) தீர்ப்பு வெளிவரவுள்ள நிலையில், தீர்ப்பு குமரனுக்குச் சாதகமாக அமைய இருப்பதை அறிந்துகொண்டு சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
துரிதமாகச் செயல்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேலு சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளியைக் கைதுசெய்துள்ளார்.
தீர்ப்பு சாதகமாக அமைந்துவிடும் என்று எண்ணி மச்சானை மாமன் வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details