திருப்பத்தூர்: மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 19ஆவது வார்டு சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக ஆதரவு வேட்பாளர் முத்து, அதிமுக ஆதரவு வேட்பாளர் ராஜனந்தம் ஆகியோர் போட்டியிட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் (அக். 12) இரவு வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இரு வேட்பாளர்களும் இரண்டாயிரத்து 142 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்தனர்.
அஞ்சல் வாக்குகளை எண்ணியபோது திமுக ஆதரவு வேட்பாளர் ஒரு வாக்கும், அதிமுக ஆதரவு வேட்பாளர் மூன்று வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்தார். இந்த நிலையில் திமுகவினர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி அலுவலர்களிடம் கோரிக்கைவைத்தனர்.