தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஸ்டாலின் தான் வராரு’ பாடலுக்கு நடனமாடிய திருப்பத்தூர் எம்எல்ஏ - DMK

திருப்பத்தூர்: திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக வேட்பாளருமான அ.நல்லதம்பி வாக்கு சேகரிப்பின்போது ”ஸ்டாலின் தான் வராரு...விடியல் தரப் போராரு!’ பாட்டுக்கு நடனமாடி அசத்தினார்.

ஸ்டாலின் தான் வராரு பாட்டுக்கு நடனமாடிய திமுக வேட்பாளர்
ஸ்டாலின் தான் வராரு பாட்டுக்கு நடனமாடிய திமுக வேட்பாளர்

By

Published : Mar 25, 2021, 10:10 AM IST

திருப்பத்தூர் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், மீண்டும் தேர்தலில் களம் காணும் வேட்பாளருமான அ.நல்லதம்பி, நேற்று (மார்ச்.25) கந்திலி வடக்கு ஒன்றியம் பகுதியிலுள்ள பா.முத்தம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்பகுதியில் தனது திறந்தவெளிப் பிரச்சார வாகனத்தில் வந்த அவரை, அப்பகுதியை சேர்ந்த கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவி வரவேற்றனர்.

’ஸ்டாலின்தான் வராரு’பாடலுக்கு நடனமாடிய திமுகஎம்எல்ஏ

அப்போது ”ஸ்டாலின்தான் வராரு... விடியல் தரப்போறாரு” பாடலுக்கு அவர் நடனமாடி பொது மக்களை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பரப்புரையின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் தெற்கு தொகுதி மாவட்டச் செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:நாமக்கல் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

ABOUT THE AUTHOR

...view details