திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில், 74வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தேசியக் கொடி ஏற்றினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டனர்.
ஆயுதப்படை மைதானத்தில் கொடியேற்றிய திருப்பத்தூர் ஆட்சியர்! - 74ஆவது சுதந்திர தினம்
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 74வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தேசியக் கொடி ஏற்றினார்.
இவ்விழாவில் கரோனா நோய்த் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 காவல் துறையினர் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த 99 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ், 516 பயனாளிகளுக்கு 1 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரத்து 946 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:74ஆவது சுதந்திர தினம்: தென் மாவட்டங்களில் கொடியேற்றிய ஆட்சியர்கள்...!