திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மீண்டும் நில அதிர்வை மக்கள் உணர்ந்து, வீடுகளை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியான அரங்கல்துருகம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு நில அதிர்வு ஏற்பட்டு தர்கா சுற்று சுவர் சிறிதளவு சேதமடைந்தது. இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் ஆம்பூர் அடுத்த அத்திமாகுலப்பள்ளி கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதே பகுதியில், கடந்த 2018ஆம் ஆண்டு தொடர்ந்து மூன்று தினங்கள் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று முன்தினம் இதே போன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆம்பூர் அருகே மீண்டும் நில அதிர்வு இது குறித்த உரிய தகவல்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆராய்ந்து தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நடிகர் விஜய் சேதுபதி மீது அவதூறு வழக்கு - உண்மையை ஆராயும் போலீஸ்