தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லை..!’ - மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லை என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா தெரிவித்துள்ளார்.

’திருப்பத்தூர் முழுவதிலும் அரசு மருத்துவர்களின் பற்றாக்குறை இல்லை..!’ - மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா
’திருப்பத்தூர் முழுவதிலும் அரசு மருத்துவர்களின் பற்றாக்குறை இல்லை..!’ - மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா

By

Published : Jul 24, 2022, 3:45 PM IST

திருப்பத்தூர்:வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டட கட்டுமான பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் பிரசவ வார்டு மற்றும் உள் நோயாளிகள் பிரிவை ஆய்வு செய்து பதிவேடுகளை பார்வையிட்டு மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரசவ மருத்துவர் பற்றாக்குறை காரணமாக இரண்டு குழந்தைகளை சுமந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , “மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏதும் தற்போது இல்லை.கட்டிடங்கள் மட்டுமே பற்றாக்குறை இருந்தது. அதற்கும் தற்போது நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.ஆய்வின் போது மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி...! மகிழ்ச்சியில் மாணவர்கள்...

ABOUT THE AUTHOR

...view details