திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) புதியதாக மேலும் 93 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 951ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 258 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 78 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூரில் 4 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
திருப்பத்தூர் : புதிதாக 93 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 951ஆக உயர்ந்துள்ளது.
Thirupathur covid19 update
மேலும், மாவட்டத்தில் 70 ஆயிரத்து 730 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 2 ஆயிரத்து 131 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மூன்றாயிரத்து 869 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.