திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (செப்.11) புதிதாக மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பத்தூரில் மேலும் 84 பேருக்கு கரோனா
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (செப்.11) புதியதாக மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 590ஆக அதிகரித்துள்ளது.
Thirupathur covid19 case
மேலும் அம்மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 995 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மாவட்டத்தில் 65 ஆயிரத்து 939 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டு 1,880 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.மேலும் 3 ஆயிரத்து 686 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.