திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிபவர் சிவனருள். அவரின் தாயார் ராஜகுமாரி (79) தன்னுடைய பேத்தி திருமணத்திற்காக குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றிருந்தார்.
திருப்பத்தூர் ஆட்சியரின் தாயார் மரணம்! - tiruppattur district collector
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் தாயார் மரணத்திற்கு கட்சிப் பிரமுகர்கள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், தொழில் அதிபர்கள் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவர் அங்கு திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். திருப்பதியிலிருந்து அவரின் உடலை உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் தங்கியுள்ள திருப்பத்தூர் பகுதியிலுள்ள சிகே ஆசிரமம் குடியிருப்பு இல்லத்திற்கு எடுத்துச்சென்றனர்.
மாவட்ட ஆட்சியரின் தாயார் இறப்புச் செய்தி கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஊழியர்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், தொழில் அதிபர்கள் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.