தமிழ்நாட்டில் சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் நாளுக்குநாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 76 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,495ஆக உயர்ந்துள்ளது.
ஒரு லட்சத்தை நெருங்கும் திருப்பத்தூர் கரோனா பரிசோதனை எண்ணிக்கை - Corona count
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட கரோனா தொற்று எண்ணிக்கை நிலவரம்
தற்போது வரை அம்மாவட்டத்தில் 4,948 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 106 பேர் உயிரிழந்துள்ளனர்.லேசான அறிகுறி உள்ள 2, 998 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை 97,573 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 1,733 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.
Last Updated : Oct 7, 2020, 8:49 PM IST