தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்மோட்டார் திருடிய இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! - Tirupattur district news

திருப்பத்தூர்: ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான மின் மோட்டாரை திருடிய இளைஞரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

stole the electric motor
stole the electric motor

By

Published : Oct 28, 2020, 12:46 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எவலம்பட்டி ஊராட்சி ஆர்டிஓ அலுவலகம் பின்புறம் உள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமாக மின் மோட்டார் உள்ளது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 27) இரவு மின் மோட்டாரை இளைஞர் ஒருவர் திருடிக்கொண்டிருப்பதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக பொதுமக்கள் சென்று அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய காவல் துறையினர், அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ஜோலார்பேட்டை ஒன்றியம் அண்ணானபட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: கிராமசபை மீட்பும் ஊராட்சி உரிமைகளும்!

ABOUT THE AUTHOR

...view details