வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதில் அமெரிக்காவுக்கான துணை தூதர் மற்றும் அமெரிக்காவின் அறிவியல் இயக்கமான NSF இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் ஆளுநர் பேசுகையில், இந்தியாவும் அமெரிக்காவும் நீண்ட ஆண்டுகளாக நட்பு நாடாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்தியா அமெரிக்காவுடனான உறவு ஜனநாயகத்துமானதாக உள்ளது. இந்திய ஜனநாயகம் ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழம்பெருமை வாய்ந்தது. இலக்கியத்திலும், ஏட்டிலும் இந்திய ஜனநாயகம் உறுதிப்படுத்துகிறது. அமெரிக்க இந்திய இடையிலான உறவு ஆண்டுக்காண்டு மேம்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது.
இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா நூறாவது சுதந்திர தினத்தை கடக்க உள்ள போது இன்றைய இளைஞர்களாகிய நீங்கள்தான் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அது உங்களுடைய பொறுப்பும் கூட. இதற்கு முன்பு வரை அரசாங்கத்தின் வளர்ச்சி ஆக இருந்தது தற்போது மக்களுக்கான வளர்ச்சியாக இந்தியா மாறி வருகிறது. இதற்குக் காரணம் உங்களைப்போன்ற இளைஞர்களே. இதற்கு முன் 400 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தது. ஆனால் தற்போது 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளது இதற்கும் படித்த இளைஞர்களே காரணம்.