திருப்பத்தூர்: தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நேற்றுமுன்தினம் (ஏப்.6) சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் நிறைவடைந்து வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடி மருதகேசரி ஜெயின் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. இன்று பலத்த பாதுகாப்புடன் அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோரின் முன்னிலையில் 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குபதிவான இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகள் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புகள் உடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டன!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் சிவனருள் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வைத்து சீல் வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்