திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்வேல் (22). இவர் கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் ஆம்பூர் காட்டுப் பகுதிகளில் அனுமதியின்றி காட்டுப் பன்றி, மான், முயல் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த மேஸ்திரி கைது! - gun seized
திருப்பத்தூர்: வனவிலங்குகளை வேட்டையாட அனுமதியின்றி வீட்டில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த கட்டட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.
அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி
இந்தத் தகவலின் பேரில், காவலர்கள் இன்று அதிகாலை பச்சகுப்பம் பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டனர். இதையடுத்து, நடத்திய சோதனையில், அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த பொன்வேலைக் காவலர்கள் கைது செய்தனர். அவருடைய துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்