தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

30 ஆண்டுகள் காலமாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள்! - demand to repair the road

திருப்பத்தூரில் 30 ஆண்டுகள் காலமாக சாலை சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பொதுமக்கள் பயணித்து வரும் நிலையில் சாலையை சீரமைத்துத் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள்...சாலையை சீரமைத்து தர கோரிக்கை!
30 ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள்...சாலையை சீரமைத்து தர கோரிக்கை!

By

Published : Jun 26, 2022, 5:25 PM IST

திருப்பத்தூர்மாவட்டம், தண்டுகானூர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் சுமார் 30 ஆண்டுகள் காலமாக தண்டுகானூர் பகுதி சாலை குண்டும் குழியுமாக உள்ள நிலையில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இப்பகுதி மக்கள் இந்த வழியாகத்தான் அருகே உள்ள பள்ளி மற்றும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அது மட்டுமின்றி அன்றாடத் தேவைக்காக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையைப் பயன்படுத்தும்பொழுது அதிக விபத்துகள் நடைபெற்று வருகிறது எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் இந்த சாலை வழியாகத்தான் விஷமங்கலம் மற்றும் உடையாமத்துர் உள்ளிட்ட கிராமத்திற்கும் செல்ல வேண்டும் என்றும்; இந்த சாலையை அமைத்தால் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

30 ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள்...சாலையை சீரமைத்து தர கோரிக்கை!

அதுமட்டுமின்றி கடந்த ஆட்சியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்படும் அத்தொகை என்ன ஆனது என்று கூட தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சாலையை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:"நாசா" செல்ல கிடைத்த பணத்தை கழிவறை கட்ட பயன்படுத்திய பள்ளி மாணவியின் கதை - ஈரோடு மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details