வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட கிடப்பனூர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்கள் மருத்துவமனை உள்ளிட்ட தேவைக்கு கிடப்பணூர் பகுதியில் இருந்து வெலக்கல்நத்தம் பகுதிக்கு சென்று பிரதான சாலையை அடையவேண்டும் என்றால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் நீண்ட நாள்களாக இருக்கும் மண் சாலையை மாற்றி தார் சாலை அமைத்து தரக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் சாலையை மாற்றித்தர அரசு அலுவலர்கள் முன்வராததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.