தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிச்சை எடுப்பதுபோல் நடித்து கொள்ளையடித்த பலே திருடன் கைது - குற்றச் செய்திகள்

வாணியம்பாடியில் பிச்சை எடுப்பது போல் நடித்து, வீட்டினுள் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்த நபரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டுகள், நகைகள், லேப்டாப் உள்ளிட்டப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

கைது
கைது

By

Published : Jun 28, 2021, 8:08 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பிச்சை எடுப்பது போல், வீட்டிற்குள் நுழைந்து, யாரும் இல்லை என்றால் பணம், பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் செல்வதாக வாணியம்பாடி காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில் கடந்த ஜூன் 5ஆம் தேதி, கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில், பயாஸ் என்பவர் வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் லேப்டாப், செல்போன் உள்ளிட்டப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றார்.

இதேபோல் கடந்த ஜூன் 18ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில், சத்யா என்பவரின் வீட்டிற்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர், ஏடிஎம் கார்டுகள், ரூ. 20 ஆயிரம் பணம், 1 சவரன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றார்.

பிச்சைக்காரனாக வேடம் தரித்து கொள்ளை

இதனைத்தொடர்ந்து பிச்சை கேட்பது போல் நடித்து வாணியம்பாடி முழுவதும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் அடையாளம் தெரியாத நபரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில், தனிப்படையினர் குற்றவாளியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் மாராபட்டு அருகே தனிப்படை காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவலர்களைப் பார்த்து அங்கிருந்து தப்பி ஓடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர், ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த வேலன் என்பது தெரியவந்தது.

மேலும் வாணியம்பாடி முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பிச்சை எடுப்பதுபோல் நடித்து, வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஏடிஎம் கார்டுகள், நகைகள் உள்ளிட்டப் பொருட்கள் மீட்கப்பட்டது.

இதையும் படிங்க:கரூர்: பிரபல வணிக வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details