தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூங்கும்போது ஏற்பட்ட விபரீதம் - ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் அனுமதி - ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் அனுமதி

ஆம்பூரில் முதலமைச்சர் வருகைக்காக அவசர அவசரமாக தோல் கழிவுகளை அகற்றிய நகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரத்தில் சிக்கி ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.

ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் அனுமதி
ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் அனுமதி

By

Published : Jun 29, 2022, 5:42 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் பகுதியிற்கு இன்று (ஜூன் 29) வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலர்கள் ஆம்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் ஓய்வு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொழிற்சாலை அருகே உள்ள பாலாற்றில் தோல்கழிவுகளை அகற்ற ஆம்பூர் நகராட்சி தூய்மை அலுவலர் உத்தரவின் பேரில் நகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி மூலம் தோல் கழிவுகளை அகற்ற நகராட்சி ஊழியர் சுரேஷ் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுப்பட்டிருந்தார்.

அப்போது மோட்டுக்கொள்ளை பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் அங்கு தூங்கிக்கொண்டிருப்பதை அறியாமல் அவர் மீது ஜேசிபி வாகனம் ஏறியது. இஸ்மாயில் தனியார் உணவகத்தில் பணியாற்றிய நிலையில் தினமும் பாலாற்றில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்பாரா விதமாக இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இஸ்மாயில் தலை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை சிறை பிடித்து ஓட்டுநரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் நகர்மன்ற தலைவர், நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இதனை தொடர்ந்து காவல் துறையினர் ஜேசிபி ஓட்டுநர் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதலமைச்சர் வருகைக்காக தோல் கழிவுகளை அவசர அவசரமாக சுத்தம் செய்ய வந்த ஜேசிபியில் சிக்கி ஒருவர் உயிருக்கு போராடும் நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கேரளாவிலிருந்து தப்பி வந்த 2 வடமாநில கொள்ளையர்களை கைது செய்த சென்னை ரயில்வே போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details